Pages

Saturday, April 23, 2011

தாய்

அன்னைக்கு இணையாக
ஆண்டவனுண்டோ-அவள் 
அன்புக்கு இணையாக 
ஆனவருண்டோ 
பெற்றவளே தெய்வமாக 
இருக்கையிலே- மற்ற 
தெய்வம் நமக்கெல்லாம் 
வேண்டுவதுண்டோ .

ஈரைந்து மாதங்கள் 
இராப்பகலா விழித்திருந்து 
பத்தியங்கள் பல நோம்பி 
பத்திரமாய் பெற்றெடுத்தாள் நம்மை 
பிள்ளை கூனாய் இருந்தாலும் 
குருடாய் பிறந்தாலும் 
முடமாய்  இருந்தாலும்- மூளை 
இல்லாதிருந்தாலும் 
அரவணைத்தே மகிழ்ந்திடுவாள் உன்னை 
அவள் தானே தெய்வமிகு அன்னை .

தாய் என்ற சொல் இங்கே
வூனுருவம் உள்ளவைகள் 
உயிரினங்கள் பயிரினங்கள் 
அத்தனைக்கும் இவுலகில் உண்டே !!
அன்பை செலுத்தி பிள்ளை 
அணைப்பினிலே கனிந்துருகும் 
தாயை தெய்வமன்றி வேறென்ன 
அழைப்பதுவோ.

வற்றா கடல் கூட வற்றினாலும் 
வற்றிடலாம் 
வானம் முழுவதையும் அளந்தாலும் 
அளந்திடலாம் 
பாவி புவியாவும் அழிந்தாலும் 
அழிந்திடலாம் 
அன்னையின் அன்பு மட்டும் 
வற்றிடுமோ வரண்டிடுமோ 
சொல் . 


தாய்

அன்னைக்கு இணையாக
ஆண்டவனுண்டோ-அவள் 
அன்புக்கு இணையாக 
ஆனவருண்டோ 
பெற்றவளே தெய்வமாக 
இருப்பதினாலே - மற்ற 
தெய்வம் ஓன்று நமக்கெல்லாம் 
வேண்டுவதுண்டோ .

ஈரைந்து மாதங்கள் 
இராப்பகலா விழித்திருந்து 
பத்தியங்கள் பல நோம்பி 
பத்திரமாய் பெற்றெடுத்தாள் !
பிள்ளை கூனாய் இருந்தாலும் 
குருடாய் பிறந்தாலும் 
முடமாய்  இருந்தாலும்- மூளை 
இல்லாதிருந்தாலும் 
அரவணைத்தே மகிழ்ந்திடுவாள்
அவள் தானே தெய்வமிகு அன்னை .

தாய் என்ற சொல் இங்கே
வூனுருவம் உள்ளவைகள் 
உயிரினங்கள் பயிரினங்கள் 
அத்தனைக்கும்   உண்டே !!
அன்பதனை  செலுத்தி பிள்ளை 
அணைப்பினிலே கனிந்துருகும் 
தாயை தெய்வமன்றி வேறெப்படி 
அழைப்பதுவோ.

வற்றா கடல் கூட வற்றினாலும் 
வற்றிடலாம் 
வானம் முழுவதையும் அளந்தாலும் 
அளந்திடலாம் 
பாவி புவியாவும் அழிந்தாலும் 
அழிந்திடலாம் 
அன்னையின் அன்பு மட்டும் 
வற்றிடுமோ வரண்டிடுமோ 
சொல் . 


குழந்தை

களங்கம் காணா உள்ளம் 
விளங்கும் சிறு விழிதான்
சூதொன்றும் அறியாத சூத்திரம் 
 துலங்கும் மழலை மொழி 
வாய்த்திரன் இல்லாத
 வஞ்சனை செய்யாத 
தெய்வத்தின் அவதாரம் .

பொக்கை வாய் திறந்து 
புன்னகை செயுங்கால்
எக்கையும் தழுவிடவே 
தாவி வரும் , அக்குழந்தை 
அழுத மொழி யாரறிவார் 
தாய் என்ற தெய்வம் தவிர்த்து .

பொய்யுலகம் அறியாப்பிரம்மம்  
பொய்யர்களின் பித்தலாட்டம் 
உணராத உருவம் 
பாம்பின் வால்தொட்டிழுத்து 
விளையாடும் பருவம் 
குழந்தை பருவம்.

சிறு நரந்தை வாய் தெரிய 
மெல்லவே நகை செய்து 
மெது விரலால் கை கொட்டி 
ஆர்பரிக்கும் அழகோ தனி.
மென் பாதம் நோகாமல் 
மெல்லவே நடை பழகி 
எழுந்து விழும் அழா!!.

இறந்தவர்கள் சொர்கத்தை 
எய்திவிட்டார் என்றெல்லாம் 
சொல்லுவர் உலகரியார்-அச்
சொர்க்கம் இறந்தபின் இல்லையப்பா  
சிறு குழந்தை மழலையில் தான் 
உள்ளதப்பா ! உள்ளதப்பா!!.





எழுந்து நில்

தேனாய் நினைத்த வாழ்க்கை
கருந்தேளாய் மாறினாலும்-வாழ்வை
 நிந்தை செய்திடாதே 
உன்  சிந்தை தளர்ந்திடாதே!!

இந்த
 விந்தை உலகில் நீ என்ன 
சந்தை விலை பொருளா ?அந்த 
ஈச ன்உனக்கு ஈந்த சிந்தை உள்ளவரை 
கை ஏந்தி பிழைத்திடாதே -உன்
மெய்கெட்டு அழிந்திடாதே .

கருத்துண்டுஉனக்கிரெண்டு 
கையுமுண்டு -தொழில்
மருத்துண்டு சோம்பிடாதே-துயர் 
பீடித்து வீழ்ந்திடாதே 

கோணிய தென்னை மரம் 
குலை தாங்கி நின்றாலும் 
தலை  சாய்ந்து வீழ்வதில்லை -தன்
நிலை தாழ்த்தி கொள்வதில்லை.

உயிர் தாங்கிய இவ்வுடம்பு
  ஓடாய் உடைந்தாலும் -நீ 
ஓய்ந்து இருந்திடாதே -தலை 
சாய்ந்து வீழ்ந்திடாதே. 



 . 


எழு-துணி -முடி

காலத்தை வீணாய் கழிக்காதே 
பல கடமைகள் உண்டு நீ மறக்காதே 
வாழ்க்கையை சுமையாய் நினைக்காதே 
வருவது வரட்டும் மலைக்காதே. 

எண்ணத்தை தட்டி எழுப்பிவிடு -அதன் 
எல்லைவரை சென்று  பார்த்துவிடு
தொல்லை இல்லா வாழ்க்கை சுவைக்காது 
துன்பமும் இன்பமும் நிலைக்காது. 

ஆசைகள் உன்னை அழித்துவிடும் 
ஆணவம் உன்னை கெடுத்து விடும் 
ஒழுக்கம் உன்னை உயர்த்திவிடும் -மன 
ஊக்கம் கொண்டால் மதிப்பு வரும். 

தொல்லைகள் கொடுப்பதை மறந்து விடு-வரும்
 தொல்லையை எதிர்க்க துணிந்து விடு 
நல்லவை செய்திட நினைத்து விடு -பிறர் 
நலம் பெற உனையே கொடுத்து விடு.




ஏன்,ஏன் ,ஏன் ?

நிலவே நீ காய்வது ஏனோ  ?
நிம்மதி அற்றோர் வாழ்வில் 
நிம்மதி வூட்டவா .

தென்றலே நீ தவழ்வது ஏனோ?
தேன் மலர் மணத்தை
 தெருவில் பரப்பவா ! 

மலரே நீ மலர்வது ஏனோ ?
மங்கையர்வாழ்வை 
உவமை காட்டவா .

ஞாயிறே நீ சுடுவது ஏனோ 
நீதி அற்ற ஞாலம் 
அழிகவே என்றா .

இரவே நீ இருள்வது ஏனோ 
இருட்டில் தீமையை 
விரைந்து வளர்க்கவா. 

மழையே நீ பொழிவது ஏனோ 
நல்லோர் பல பேர் 
உண்டென்று எண்ணியா .

புயலே நீ பொங்குவது ஏனோ 
பொறுமை காத்தது 
போதுமென்று எண்ணியா .

மரமே நீ அசைவது ஏனோ 
மனிதனை போல நான் 
மடையன் இல்லை என்றா.

அலையே நீ அலைவது ஏனோ 
வாழ்க்கையின் உவமை 
நீ என்று காட்டவா . 

அன்பு

பசும்பயிர் மழை நோக்கும்
பசும்பால் கிழை நோக்கும் 
கருவண்டு தேன் மொய்க்கும் 
மலரும் அதை தாங்கி நிற்கும்

தரை படர்ந்த கொடியதனை
தன் மேலே படரவைக்கும் 
கொம்பினதன் அன்பை போல 
மானுடத்தில் கண்டதுண்டோ 

அன்பிற்கு இவை போல 
அழகான உவமை உண்டோ ?
என்புதோல் உடம்பப்பா 
அன்பு அதில் இல்லைப்பா.

ஆதி வகுத்த வழி வாழ பிறந்தவனே 
பாதி வளர்ந்து விட்டாய்
பக்குவம் அடைந்துவிட்டாய்
மீதி உள்ள காலமெல்லாம் 
பூத்து குலுங்க வேணும் .

காலேஜ் கடந்து விட்டாய் -நல்ல 
நாலேட்ஜ் வளர்த்து விட்டாய் 
டீனேஜ் வேலைக்கெல்லாம் -ஒரு 
பாண்டேஜ் போடவேணும்

மேரேஜ் செய்ய வேணும் -அதை 
மேனேஜ் பண்ணவேணும் 
ஓல்ட் ஏஜ் வருவதற்குள் -பணத்தை 
ஸ்டோரேஜ் செய்ய வேணும் .

நான் என்று சொல்லாதே-அது 
நலத்தை எல்லாம் அழித்து விடும் . 
நாம் என்று சொல்வாயானால் -அது 
நல்லதெல்லாம் கொண்டு வரும். .

பஞ்சணை பாதையல்ல வாழ்க்கை ,
உற்றுப்பார் தெரியும் அதில் சீழ்க்கை ,
வஞ்சனை மேடுண்டு
வஞ்சியாரால் தாழ்வுண்டு-நல்
சிந்தனை மனம் கொண்டால் 
சீரான ஏற்றமுண்டு . 

கற்று தெரிந்து கொள் 
சுற்றம் புரிந்து கொள் 
குற்றமொன்றும் இன்றி -உனது 
கொற்றம் அமைத்து கொள். 






a man   எமன் !
woman  ஓமன் !
ஒருவருக்கு ஒருவர் .

puthusa yosi.

மூளையை
 மூலதனமாக்கு !
மூலையில் போடாதே ,
மூலைக்கல்லாக்கு.
பல்லாக்கு 
தூக்குவார்கள் .