Pages

Thursday, June 2, 2011

ஆ.ப.ந.:உனக்கு வேற சொந்தக்காரர்கள் இருக்கிறார்களா .உன்னை வந்து 

பார்பார்களா 

ஆ.ப : எங்க சித்தி யும் மாமாவும் இருக்கிறார்கள் .சித்தி அன்பாய் இருப்பார்கள்.

ஆ.ப.ந.  உங்க மாமா அத்தை ஒன்னோடு அன்பாய் இருப்பார்களா. 

ஆ.ப :     அத்தை என்னை அனாதைன்னு எப்பவும் திட்டுவாங்க.பக்கத்து 

வீட்டுகாரர்களும் என்னையும் எங்க அம்மாவையும் திட்டுவாங்க.

ஆ.ப.ந. அப்ப ஒம்மனசுல என்ன தோணும் .

ஆ.ப :  ரொம்ப கோபம் வரும்.யாருக்கிட்டயும் பேசமாட்டேன். தனியா 

ஒக்காந்து அழுதுக்கிட்டே இருப்பேன்.அம்மாச்சி மட்டுந்தான் எம்மேல பாசமா 

இருப்பாங்க.

ஆ.ப.ந.  ஒன்ன இங்க கொண்டு யார் சேர்த்தார்கள். 

ஆ.ப :   எங்க மாமாவும்,அம்மாச்சியும்.

 ஆ.ப.ந. இங்க ஒனக்கு புடிச்சிருக்கா. 

ஆ.ப.. ஆமா.

ஆ.ப ஒன்னோட ஆசை என்ன.

ஆ.ப: நெறையா படிக்கணும் .டாக்டருக்கு படிக்கணும் .

ஆ.ப.ந. ஏன் டாக்டருக்கு படிக்கணுமுன்னு ஆச வந்தது.

ஆ.ப: எங்க அம்மாச்சி ரொம்ப ஒடம்பு சரியில்லாம இருக்காங்க .அவங்கள 

நல்லாக்கணும்.( இப்படி சொல்லும் போது அந்த குழந்தையின் முகம் தான் ஒரு 

டாக்ட்டர் ஆகி விட்டது போலவே ரொம்ப மகிழ்ச்சியோட காணப்பட்டது.   )

ஆ.ப.ந. உன்னுடை ஆச கடவுளால் நிறைவேற்றப்படும் .உனக்காக  நாங்க 

எல்லோரும் கடவுள் கிட்ட பிரார்த்தனை செய்கிறோம் .

(கடைசியாக மாமா எங்க அம்மாவ கூட்டிட்டு வருவீங்கல்ல என்று அதிக 

நம்பிக்கையில் கேட்டது மனதை உருக்குவதாக இருந்தது.)

கண்டிப்பாக ஒங்க அம்மா ஒன்னவந்து பாப்பாங்கம்மா ன்னு சொல்லிவிட்டு 

வெளியில்.வந்தேன்.












                                                                           உரையாடல்

ஆ.ப.ந.       ஒம்பேறேன்னம்மா 

ஆ.ப.            மௌனம் .

ஆ.ப.ந.       ஒம்பேறேன்னம்மா (மறுபடியும் )

ஆ.ப.           கயல் விழி( மெதுவாக , தலையை நிமிர்தாமல்

ஆ.ப.ந .        கயல் விழி , நல்லா இருக்கியாம்மா.

ஆ.ப.            மௌனம்.

ஆ.ப.ந.         கயல் விழி சாப்பிட்டியாம்மா?

ஆ.ப.ப.   :     தலையை குனிந்து கொண்டிருந்தார்.

ஆ.ப.ந.       ஏம்மா, காலையில சாப்பிட்டியாம்மா .

ஆ.ப .         ஆமா சாப்பிட்டேன் (மெதுவாகச் சொன்னார்.)

ஆ.ப.ந .       என்ன சாப்பாடு.

ஆ.ப.           இட்லி. ( இப்பொழுது மெதுவாக தலையை நிமிர்ந்து பார்த்தார்.)

ஆ.ப.ந .     எத்தனை இட்லி. 

 ஆ.ப.            நாலு. 

 ஆ.ப.ந .      நல்லாருந்துச்சா.

ஆ.ப.          ஆமா .

ஆ.ப.ந .     ஒங்க அப்பா அம்மா எங்க இருக்காங்க .

ஆ.ப.       (   முகத்தில் சோகம் தெரிந்தது. )

ஆ.ப.ந  இந்த மாமாவ புடிச்சிருக்கா.

ஆ.ப.     மெதுவாக தலையை தூக்கி பாத்து ,ஆமா என்றாள்.

ஆ.ப.ந     உனக்கு வெளையாட போணுமா .

(அவழின் கண்களில் விளையாட்டு ஆர்வம் தெரிந்தது.

இத்துடன் முதல் நாள் உரையாடல் முடித்துக்கொள்ளப்பட்டது.