Pages

Saturday, April 23, 2011

எழுந்து நில்

தேனாய் நினைத்த வாழ்க்கை
கருந்தேளாய் மாறினாலும்-வாழ்வை
 நிந்தை செய்திடாதே 
உன்  சிந்தை தளர்ந்திடாதே!!

இந்த
 விந்தை உலகில் நீ என்ன 
சந்தை விலை பொருளா ?அந்த 
ஈச ன்உனக்கு ஈந்த சிந்தை உள்ளவரை 
கை ஏந்தி பிழைத்திடாதே -உன்
மெய்கெட்டு அழிந்திடாதே .

கருத்துண்டுஉனக்கிரெண்டு 
கையுமுண்டு -தொழில்
மருத்துண்டு சோம்பிடாதே-துயர் 
பீடித்து வீழ்ந்திடாதே 

கோணிய தென்னை மரம் 
குலை தாங்கி நின்றாலும் 
தலை  சாய்ந்து வீழ்வதில்லை -தன்
நிலை தாழ்த்தி கொள்வதில்லை.

உயிர் தாங்கிய இவ்வுடம்பு
  ஓடாய் உடைந்தாலும் -நீ 
ஓய்ந்து இருந்திடாதே -தலை 
சாய்ந்து வீழ்ந்திடாதே. 



 . 


No comments:

Post a Comment