Pages

Saturday, November 14, 2009

விழித்தெழு

தூக்கத்திலும் துக்கத்திலும்
வாழ்ந்திராதே.
ஊக்கத்திலும் உற்சாகத்திலும்
வாழ்ந்திரு. உருப்படுவாய் .

எழுந்து நில்

எழுந்து நின்று வாழ்ந்து பார்
எட்டு திக்கும் தெரியும் .
விழுந்த அலை மீண்டும் எழும்!
நீயும் எழு !! மீண்டும் எழு .
கரைகள் ஏது தடுப்பதற்கு !!

எழுந்து நில் 

கலை

கையில் நல் கலை இருந்தால்
கவலை இல்லை யாருக்கும்
எவ்வேலையையும்
கலையோடு செய்தால்
கைமேல் காசு!
கவலையும் போச்சு!!
.

வறுமைக்கோடு

வறுமைக்கோடு பற்றி
வாத்தியார் கேட்டார்;
பெருமாள் சொன்னான், அதோ !
வண்டி இழுத்து போகிறானே வேலாயுதம்.
அவனது விலாவில் அது
அதி அற்புதமாக
அச்சு வார்க்கப்பட்டுள்ளது என்று !!.

இயற்கை

இயற்கைக்கு ரெக்கை இல்லை
பறப்பதற்கு !அதனால் தான்
என்றும் அழகாய்!!

இயற்கை

இயற் கைக்கு இயல்பான கை .
உதவும் கரங்களாய் !!

பெண்

பெண்ணே நீ என்ன
மலருக்கு உவமையா ?
மலர்ந்த அன்றே உதிர்வதற்கு !!.

வறுமை

வறுமையில் வாழ்வது பெருமை .
சிலுவை சுமப்பது போல் !!

Friday, November 13, 2009

பயிற்சி +முயற்சி +எழுச்சி=மகிழ்ச்சி !
இதுவே காலக்கணக்கின் சுழற்சி !!.

பழிக்கு பழி

பீடி சொன்னது
நீ என்னைக் குடித்தால்
நான் உன்னைக் குடிப்பேன்!!
பீடி மட்டுமா சொன்னது !!
சாராயமும் அதைத்தான் சொன்னது.

தமிழ் மகளே

என் இனிய தமிழ் மகளே! நீ
என் சிந்தனைக்கு எஜமானி!!
நான் உந்தனுக்கு அபிமானி .